உலகம்

பாலஸ்தீன மக்கள் வடக்கு காசாவுக்கு செல்வதற்கு இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமுலுக்கு வந்தது.
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

முதற்கட்டமாக 3 பெண் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.
இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன் தினம் விடுவித்தது.

அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
ஒப்பந்தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யா{ஹட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யா{ஹட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

இதனால் இடம்பெயர்ந்த ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பணய கைதி அர்பெல் யா{ஹட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு கட்டமாக அர்பெல் யஹூட் உட்பட 6 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய முடிவு எட்டப்பட்டுள்ளது.

எனவே வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.

 

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp