உள்ளூர் செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்- அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது அவர்கள் பல முக்கிய பெயர்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதனால் அச்சப்படுகின்ற எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது அவர்கள் பல முக்கிய பெயர்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் சமூக விரோத குற்றவாளிகளுக்காக புதிய சிறைச்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதையும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற, போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது: பாதாள உலகமும் போதைப்பொருள் வர்த்தகங்களுக்கும் எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவித்தவுடன், எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் கலக்கத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பல ஆட்சிகள் வந்துள்ளன. அவற்றில் சில ஆட்சி தலைவர்கள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்ததோடு, சிலர் தன நலனுக்காக இக்குற்றவாளிகளை ஆதரித்து பலப்படுத்தியதுதான் உண்மை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை 30ஆம் திகதி தொடங்கவுள்ளோம். அதற்கு அச்சமடைந்தே எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவற்றை அரசு பொருட்படுத்தாமல் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp