பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த அணி 50 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது.
இருவரும் அரை சதம் கடந்தனர். டேரில் மிட்செல் 76 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மேன் சதம் விளாசி அசத்தினார்.
அவர் 132 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்
அடுத்து வந்த அப்பாஸ் அரை சதம் அசத்தினார்.
அடுத்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் 344 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- உஸ்மான் கான் களமிறங்கினார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ஓட்டங்கள் எடுத்தது.
39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் உஸ்மானும் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அப்துல்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து பாபர் அசாம் மற்றும் அணித் தலைவர் ரிஸ்வான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரிஸ்வான் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பல விமர்சனங்களுக்கு உள்ளான பாபர் அசாம் அரை சதம் விளாசி அசத்தினார்.
அவர் 78 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்
அடுத்து வந்த சல்மான் ஆகா 58 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ஓட்டங்களுக்கு சகல விக்;கெட்டுகளையும் இழந்தனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் திகதி நடைபெறவுள்ளது

