உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாமலை குழிக்கு அனுப்பவுள்ளதாக அரச எம்.பி கூறியுள்ளதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் – சாகர காரியவசம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவை விரைவில் குழிக்கு அனுப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்து நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதை காண்பிக்கிறது.

ஆளுந்தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றமை கவலைக்குரியது.
நாமல் ராஜபக்ஷவுக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருவதால், அரசாங்கம் அவருக்கு தீங்கிளைக்கும் நோக்கில் சதி செய்து வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp