உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நல்லூர் ஆலயத்தருகில் அமைக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகையை மாநகர சபை அதிரடியாக அகற்றியது

யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று அகற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை (21) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp