2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வாபஸ் பெறப்பட்ட 102 சட்ட வழக்குகளில், 65 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் 34 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்படமாட்டாது என்றும், மேலும் மூன்று வழக்குகள் தொடர்பான தீர்மானங்கள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
மேலும், பாராளுமன்றத்திற்குள் உள்ளவர்களுக்கும் வெளியே உள்ளவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எந்த நபரின் பதவி அல்லது நிலைமை பார்க்காமல், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
