உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தீயில் சிக்கினான் சிறுவன் தாயும் தந்தையும் தாயின் காதலனும் சட்டத்தில் சிக்கினர்

இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09-08) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன் பலியாகியுள்ளார்.

தீ பரவிய நேரத்தில் வீட்டில் இருந்த சிறுவன் கடுமையாக காயமடைந்து, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் தாயுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதான மூவரும் நேற்று (10-08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பலாங்கொடை பதில் நீதிவான் தேசபந்து சூரியபடபெத்தி, அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp