செய்திகள் உள்ளூர் முக்கிய செய்திகள்

திரைத் துருவங்கள் ரஜினி–கமல் மீண்டும் அதிரும் இணைவு

தமிழ் திரையுலகின் இருபெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர், சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் இணையவுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் புதிய திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

கடந்த 1970-களின் பிற்பகுதியில் ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்த இவர்கள், அதன் பின்னர் நீண்டகாலமாகத் தனித்தனிப் பாதைகளில் பயணித்து வந்தனர்.

இந்நிலையில், ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு அமையவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி, ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்காலிகமாக எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.

படத்தின் கதைக்களம், படப்பிடிப்புத் திகதி மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதிலும், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களால் இந்தப் புதிய தசாப்தத்தின் மிக முக்கியமானத் திரைப்படமாக இது அமையுமென எதிர்பார்க்கின்றார்கள்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp