உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம்..!

திருகோணமலை மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டிற்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நேற்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தொழிலாளர் ஊதியம், கட்டுமானப் பொருட்களின் விலைகள் போக்குவரத்து, மற்றும் இயந்திர வாடகை, மாமிச உணவுப் பொருட்களின் உச்ச வரம்பு விலை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் மேற்கண்ட பிரிவுகளுக்கான தற்போதைய விலை நிலவரங்கள், எதிர்கால தேவைகள் மற்றும் அவற்றின் பொருளாதார விளைவுகள் குறித்து ஆராயப்பட்டு, மாவட்ட மக்களுக்கு நியாயமான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட விலை அமைப்பை உருவாக்க பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட பிரதம கணக்காளர் ப. ஜெயபாஸ்கர், மாவட்ட பொறியியலாளர் ஏ. கே. எம். நபீல், திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம், மாவட்டத்தின் பொருளாதாரச் செயற்பாடுகள் சீராக நடைபெறவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையினை வழங்கவும் முக்கிய பங்காக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp