உள்ளூர் செய்திகள்

தியாகி திலீபன் கிழக்கிலிருந்து வடக்கிற்கு வருகிறார்

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு ஊர்திப் பயணம் இன்று திருக்கோவில் பகுதியில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையேற்றார்.
கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகனம் தனது பயணத்தை தொடங்கியது.

இந்த நினைவு ஊர்தி, திருக்கோவிலிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை, பாண்டிருப்பு உள்ளிட்ட அம்பாறை மாவட்ட தமிழர் பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளது.

பின்னர், ஊர்தி மட்டக்களப்பு மாவட்டத்தையும் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களையும் சென்றடைந்து, இறுதியாக தியாகி திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நிறைவு பெறவுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp