உள்ளூர் செய்திகள்

தாயின் காதலனால் 9 வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட துயரம் நடைபெற்றுள்ளது

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக தொடர்ந்து தகாத உறவுக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடையவராகும்.

அவர் ரயில் ஓட்டுநராக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சிறுமியின் தாயின் திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதலன் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வீட்டில் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தபோதும், வீட்டில் இல்லாதபோதும் சந்தேக நபர் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் முதலில் தன்னை துஷ்பிரயோகம் செய்த திகதிகள் குறித்து தனக்கு தெளிவான நினைவில் இல்லை எனவும் 2023 ஆம் ஆண்டு முதல் தன்னை துஷ்பிரயோகம் செய்து வருவதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp