உள்ளூர் செய்திகள்

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியானது நீதிக்கும் உண்மைக்குமான தொடர் பயணத்தின் அடையாளம் என்கிறது கனடிய தமிழர் பேரவை

கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.

பிரம்ப்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு (10.05.2025) இடம்பெற்றிருந்தது. இலங்கையின் யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நிலைவாலயத்தை கனடிய தமிழர் பேரவை ஆதரிக்கின்றது.

உலகம் முழுவதும் தமிழர்களுக்கான நினைவேந்தலின் மாதமாக அமைந்துள்ள மே மாதத்தை முன்னிட்டு இந்நினைவுச்சின்னம் நீதிக்கும், உண்மைக்கும், தமிழர்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை சாத்தியமாக்கிய பிரம்ப்டன் நகரசபைக்கும், மேயர் பாட்ரிக் ப்ரவுன் அவர்களுக்கும், அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் நன்கொடைதாரர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp