உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழரசு, முஸ்லீம் காங்கிரஸின் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர்இ இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் (CIABOC) கைது செய்யப்பட்ட இவர்கள்இ இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதுஇ நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஒரு காணிக்குரிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக ரூ. 5 இலட்சம் கையூ+ட்டம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தின் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் குச்சவெளி–இக்பால் நகர் பகுதியில் நேற்று (31-10) கைது செய்யப்பட்டுஇ நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டனர்.

முல்லைத்தீவூ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பிரதேச சபைத் தலைவர்இ முறைப்பாட்டாளரின் காணியில் 20 பேர்ச் நிலத்துக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக முதலில் ரூ. 1 இலட்சத்து 60 ஆயிரம் பெற்றுக்கொண்டுஇ பின்னர் எஞ்சிய அனுமதிக்காக மேலும் ரூ. 5 இலட்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பெண் இதனை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்துஇ குறித்த தொகையைப் பெறும் நேரத்தில் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையூம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துபவர் ஆவார்.
கடந்த உள்ளுhராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி இணைந்து சபையின் ஆட்சியைப் பெற்றதோடுஇ இரு கட்சிகளின் ஒத்துழைப்புடன் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp