ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகக்கும் சென்றடைந்துள்ளது.
21ம் நூற்றாண்டில் தமிழகத்தின் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும்.
மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது.
எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள்.
100 ஆண்டுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கட்டியது ஒரு குஜராத்தி. இன்று புதிய பாம்பன் பாலத்தை திறந்த நானும் குஜராத்தி.
தேசத்தின் அனைத்து இடத்திலும் பாஜக தொண்டர்கள் மக்களுக்கு சேவை ஆற்றுவதை பார்த்து பெருமைப்படுகிறேன்.
சேவையாற்றும் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி, வணக்கும், மீண்டும் சந்திக்கிறேன் என தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.
இதையும் படியுங்கள்>வக்பு வாரிய சட்டமூல திருத்தத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்!