நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (ஜனவரி 5) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது.
இவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்க வாக்குமூலம் அளிக்க நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகியிருந்தபோது, முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் அப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான பாரவூர்தியை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
