செய்திகள்

டிஜிட்டல் டிரெண்ட அர்ச்சுனா எம்.பியின் வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தில் சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைக்கட்டது

அதே வழக்கு மீண்டும் 3ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்டவுள்ளது

ஒரு பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை ‘அர்ச்சுனா லோச்சன்’ என்று பெயரிட்டனர்.
ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, சரியான சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் நேற்று (21) அதிகாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முரண்பட்டிருந்தார்

ஆகவே போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

இதையடுத்து, மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்படி சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விடயம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp