உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது – சிறீதரன் எம்.பி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (3) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறீதரன்,

‘ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.

யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு இவ்வாறு வங்ரோத்தடைந்துள்ள நிலையில் ஐனாதிபதி அதனை மறைப்பது, வருத்தமளிப்பதாக உள்ளது.

இதேபோலவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சிங்களவர்களால் நடத்தப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், இந்த அரசாங்கத்தோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம்.

2 இல் 3 பெரும்பாண்மையை பெற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு தரப்போகின்றது?’ என வினவியுள்ளார்.

இதையும் படியுங்கள்>இந்திய மீனவர்கள் 23 பேருக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

 

https://fb.watch/wfbvBVQrkA/

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp