உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சேவை வழங்குநர்களுக்கும் -சமூகத்தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் புதன்கிழமை(11.02.2026) தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

கலந்துரையாடலை தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு.F.C. சத்தியசோதி அவர்கள் தலைமையேற்று நடத்தி இருந்தார்.
நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.திலீபன், சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரி திரு.க.ஜெயரூபன், சொண்ட் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சொண்ட் நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி .ச.ஜென்சி அவர்களால் இத்திட்டத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களால் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் சாவகச்சேரி சிறு குற்றப்பிரிவு பொலீஸ் பொறுப்பதிகாரி திரு.க.ஜெயறூபன் அவர்களிடம் சமூக மட்ட குழுக்களாலும்,பிரதேச செயலர் மற்றும் கிராம அலுவலர்களாலும்,

தனங்கிளப்பு பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மணல் அகழ்வுச் செயற்பாடுகள்,
இளைஞர்களின் அத்துமீறிய செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டு அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கும் -சேவை வழங்குனர்களுக்கும் இடையே “எல்லோரையும் உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தல் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு அந்த செயற்திட்டம் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள 10கிராம அலுவலர் பிரிவுகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp