அனைவரும் வாரீர்
உலக நாடக தினத்தை முன்னிட்டு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஏற்பாட்டில் 26.03.2026 வியாழக்கிழமை மற்றும் 27.03.2026 வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை அரங்கத்தில் நாடக அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில் வியாழக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சிறுவர்களுக்கான அரங்க வெளி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து 5மணிக்கு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் எங்கே எங்கே குடை எங்கே?,
பூமணி ஆகிய நாடக ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
27.03.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30மணிக்கு மக்களுக்கான நாடக அரங்க உரையும் உரையாடல்களும் நிகழ்வும் தொடர்ந்து 5.30மணிக்கு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் “யாரது என் வீட்டிற்குள் “,”மௌனத்தின் ஓலம்” ஆகிய நாடக ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

