உள்ளூர் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்று (03) முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் , நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவை , அவசர அவசரமாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகளுடன் கூடிய , எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு கூட்டு தொகுதியில் ஒரு எலும்பு கூட்டு தொகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்>இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp