உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மனிதபுதை குழிக்கு பொலிஸாரே தொடர்ந்தும் பாதுகாப்பளிப்பர்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) செம்மணியில் நடைபெறும் அகழ்வுப் பரிசோதனைகளின் பாதுகாப்பு பொறுப்பை தொடர்ந்து சாதாரண காவல்துறையினரே மேற்கொள்வது விசாரணைகளின் முடிவை பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டிய நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் அதனை எதிர்த்து விளக்கமளித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், காவல்துறையினரை அடிக்கடி மாற்றி மாற்றி பணியமர்த்துவது நடைமுறையில் சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள காவல் நிலையங்களில் இருந்து பணிப் பட்டியலின்படி அதிகாரிகள் அங்கு பாதுகாப்பு வழங்க அனுப்பப்படுவதாகவும், இது சாதாரண நடைமுறையாகும் எனவும் அவர் கூறினார்.

‘கொழும்பிலிருந்து அதிகாரிகளை அனுப்பி செம்மணியை பாதுகாக்க முடியாது. அங்கே உள்ளவர்களே பாதுகாப்புக்கு நியமிக்கப்பட வேண்டும்’ என அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் விளக்குகையில், அகழ்வுப் பரிசோதனைகள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடைபெறுவதால், காவல்துறையால் விசாரணைகளில் தலையிடவோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் எந்த அதிகாரமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
‘காவல்துறை அங்கு பாதுகாப்பை மட்டும் வழங்குகிறது. அவர்களின் இருப்பு விசாரணை முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’ எனவும் தெரிவித்தார்.

சமீபத்தில் ர்சுஊளுடு செம்மணி அகழ்வுப் பணியை பார்வையிட்டது.
அங்கு ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த நேரத்தில் காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள், வழக்கறிஞர்கள், குடும்பங்களின் சமூக பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் மகிஸ்திரேட் (தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட) ஆனந்தராஜா உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆணைக்குழு சந்தித்து கலந்துரையாடியது.

அதன் அறிக்கையில், விசாரணையை திறம்பட முடிக்க வெளிநாட்டு நிபுணத்துவமும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளும் தேவைப்படுவதாக ர்சுஊளுடு குறிப்பிட்டது. மேலும், காவல்துறையினரின் தொடர்ச்சியான பங்கேற்பு விசாரணையின் முடிவை பாதிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தது.

செம்மணியில் அகழ்வுப்; பரிசோதனைகள் கடந்த ஆண்டு (2024) ஜூலையில் மீண்டும் தொடங்கப்பட்டன.

நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் தொல்பொருள் நிபுணர்கள், தடய அறிவியல் வல்லுநர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகள் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிந்தைய காலத்தில் வட மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனிதப்புதைகுழி என்பது குறிப்பிடத்தக்கது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp