உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வு தற்காலிகமாக இன்று நிறுத்தப்படுகின்றது

யாழ்ப்பாணம் நேற்று (10-07செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

அந்தவையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9) 14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு 9 நாட்களில் நிறைவடைந்தது.

முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது.

இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09) ஒரு சிறுமியின், ஆடைகள் , இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு இன்று தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp