சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மீள்கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்களை அடையாளம் காணவும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் விசேட குழுக்களை களமிறக்கியுள்ளது.
அடுத்த மூன்று வாரங்களாக இந்த குழுக்கள் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் சமன் ஜயசிங்க தெரிவித்தார்.
புதிய வீடுகள் அமைக்க ஏற்ற பாதுகாப்பான பகுதிகளையும், அதிக அபாயம் உள்ள பகுதிகளையும் இவ்வாய்வுகள் மூலம் கண்டறியப்படவுள்ளதாக அவர் கூறினார்.
சூறாவளியில் சேதமடைந்த பாலங்கள், வாய்கால்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீண்டும் கட்டமைக்க ஏற்றவையா என்பதை தீர்மானிக்க முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
