‘டிட்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய ரக வணிகங்களுக்காக அரசு விபத்து கடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கிறது.
இதில் மலர் கடைகள், செல்லப்பிராணி கடைகள், சிறய ரக கடைகள், அதிஸ்ட்ட லாப சீட்டு நிலையங்கள் மற்றும் கையடக்க அலைபேசி கடைகள் போன்ற சிறிய வணிகங்கள் அடங்கும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும், புனித தலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வணிகங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தயாரிக்க வழிமுறைகள் வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் பிரதேச செயலகங்கள் பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளன.
அரசு விரைவில் விரிவான விதிமுறைகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதில் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட வணிகத்திற்கும் 2 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
