ஹென்லி பாஸ்போர்ட் 2026 பட்டியலில் சிங்கப்பூர் குடிமக்கள் 193 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை என்பதால் தொடர்ந்து 3வது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக தக்கவைத்துள்ளனர்.
ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தில், டென்மார்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளன.
இவர்கள் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது.
அமெரிக்கா பாஸ்போர்ட் 10வது இடத்தில், 179 நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது. இந்தியா 85வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியல் உலக நாடுகளுக்கிடையிலான பயண சுதந்திரத்தின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துகிறது.

