திருகோணமலையை பிறப்பிடமாகவும், யாழ் தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் நேற்று (08.03.2025) இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா, தங்கலட்சுமி தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சந்திராவதியின் அன்பு மருமகனும், பத்மாவின் பாசமிகு கணவரும், பவதாரணியின் பாசமிகு தந்தையும், சிவரூபனின் பாசமிகு மாமனாரும், ஷhம்ப்ரீத்தியின் பாசமிகு தாத்தாவும், காலஞ்சென்ற மகேந்திரன், இராசலட்சுமியின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.03.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் யாழ் தொல்புரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று, அவரது பூதவுடல் தகனக் கிரியைக்கு யாழ் பொன்னாலை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்- குடும்பத்தினர்.