செய்திகள்

சட்டவிரோத கடற்தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மீன் வளம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிவடையும் பாதகமான நிலை உருவாகுவதால் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடற்படை, இராணுவம், விமானப்படை, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மூலம் இவ்வாறான தொழில்களை செய்பவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதால் இது குறித்து தத்தமது மீனவர்களுக்கு தெரியப்படுத்துமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியால் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp