முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

கோறளைப்பற்று பிரதேசத்தின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக்குழுக் கூட்டம்..!

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (11.03.2026) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் ஏ. றொபேர்ட், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ. எஸ் சசிகரன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். கங்காதரன், கணக்காளர் திருமதி. ரி. சசிகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பி. ஜெயக்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2026 பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு திணைக்கள ரீதியான அடைவுகளின் செயல்திறன், நிதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், செலவின முன்னேற்றம் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பிரதேச செயலகத்தினுள் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp