கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் இன் காலை 6.35 மணியளவில் 19 வயது இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இளைஞர் சுடப்படுவதைக் காட்டும் மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சிராய்ப்புகளுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் பின்னர் உயிரிழந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் நகர சபையின் ஊழியராக இருந்ததுடன், கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் அமைந்துள்ள கிளை வீதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன.
மேலும், இளைஞர் பிரதான வீதியை நோக்கி ஓடியபோது, அவரைத் தொடர்ந்து வந்த இருவர் மீண்டும் அவரைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றதையும் மற்றொரு சிசிடிவி காட்சி பதிவு செய்துள்ளது.
தெஹிவளை ஓபன் பிளேஸைச் சேர்ந்த இளைஞரின் கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
அவரது தாயார் தற்போது போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.
மேலும், இறந்த இளைஞர் 2023 ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரும், போதைப்பொருள் கடத்தல்காரராக சந்தேகிக்கப்படும் ‘படோவிட்ட அசங்கவின்’ உறவினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.
