விளையாட்டு

கொழும்பில் தொடங்கும் விறுவிறுப்பான மோதல்: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட்டம்!

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டியைக் காண்பதற்காக, பெருமளவிலான இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்துள்ளமை ஒரு விசேட அம்சமாகும்.
சரித் அசலன்க தலைமையிலான இலங்கை அணியில் பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் களமிறங்கியுள்ளனர். பந்துவீச்சு தரப்பில் துனித் வெல்லாலகே மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
மறுபுறம், ஹெரி ப்றூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜொஸ் பட்லர் மற்றும் சாம் கரன் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், சொந்த மண்ணில் இலங்கை அணி வலுவான ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp