உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் காலைவேளை இரு சகோதரர்கள் வெட்டி கொலை

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp