உள்ளூர்

கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி கண்டுபிடிப்பு!

கற்பிட்டி – உச்சமுனை தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் என்பன நேற்று முன்தினம் (29) கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்பிட்டி விஜய கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர் லக்ஸ்மன் றன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போதுஇ காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்றும்இ பாவிக்கப்படாத தோட்டாவொன்றும்இ வெற்றுத் தோட்டா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட குறித்த துப்பாக்கி மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்>இணக்கம் இன்றி நிறைவடைந்த பேச்சுவார்த்தை..!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp