உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குடும்ப பெண்ணுடனான உறவின் போது எடுத்த ஒளிப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த பொலிஸ் உத்தியோகஸத்தர் பணி இடைநிறுத்தம்

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் கொஸ்தாப்பர் நேற்று (26-01) பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே திருமணம் செய்த இந்த பொலிஸ் உத்தியோகஸத்தர் பொத்துவில் பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை சமீபத்தில் முகநூலில் பதிவேற்றியிருந்தார்.

இக்குற்றத்துக்காக பொத்துவில் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (25-03) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த, மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரை கைது செய்தனர்.

கைதானவர் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து இப்பொலிஸ் உத்தியோகஸ்த்தரை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஜனவரி தொடக்கம் இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கமீறல் குற்றங்களுக்காக மூன்று பொலிஸார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp