செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு..!

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இன்றைய தினம்(07.04.2026) கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இச் சந்திப்பின் போது மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை, பொதுமக்கள் நலன், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் அவசர நிலை எதிர்வுகூறல் நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதன் அவசியமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் மாவட்ட மேலதி க அரசாங்க அதிபர்,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp