உள்ளூர்

கிளிநொச்சி பளையில் வைரவர் கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த ஆனி மாதம் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp