காலி முகத்திடலை சமய வழிபாடுகளுக்காக மாத்திரமின்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் வழங்க முடிவு எடுக்கப்ட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலி முகத்திடலை சமய நடவடிக்கைகள் அல்லாத ஏனைய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி இல்லை என்ற தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது.
இந்நிலையில், அநுர அரசு காலி முகத்திடலில் சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை தளர்த்தியுள்ளது.
காலி முகத்திடலின் பராமரிப்பு மற்றும் நிர்வகிக்கவும் மாதம் 2.5 மில்லியன் தொடக்கம் 3 மில்லியன் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளாhர்
