செய்திகள்

காதலனுக்கு 41 வயது காதலிக்கு 14 வயது

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் களுத்துறை, தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை, பதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியே பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி கடந்த 25 ஆம் திகதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் தனது நண்பனுடன் இணைந்து முச்சக்கரவண்டியில் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், சந்தேக நபர் இந்த சிறுமியை தொடங்கொட பிரதேசத்தில் உள்ள தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் தந்தை இது தொடர்பில் பதுரலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சந்தேக நபரான காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp