உள்ளூர் செய்திகள்

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக வழக்கு 2026 ஜனவரி மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை நடைபெற்றது.

வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இருந்தனர்.

அவர்களது பிரதிநிதிகளான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழு மற்றும் தவராசா கலையரசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் ஆஜராகினர்

இருதரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்திருந்தபோதும் மேலதிக வாதங்கள் மற்றும் சமர்ப்பிப்புகளுக்காக வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் தேதிக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது பிரதிவாதர்கள் ஹரீஸ் மற்றும் கலீலுர் ரஹ்மான் பிரசன்னமாகியிருந்தனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp