உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கலைகள் சமூகங்களை இணைக்கும் பாலமாகப் இருக்க வேண்டும்..!

e0ae95e0aeb2e0af88e0ae95e0aeb3e0af8d e0ae9ae0aeaee0af82e0ae95e0ae99e0af8de0ae95e0aeb3e0af88 e0ae87e0aea3e0af88e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News
கலை மற்றும் பண்பாட்டை சமூகங்களை இணைக்கும் பாலமாகப் பயன்படுத்தி, அனைத்து மக்களையும் ஒரே தேசிய நோக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பண்பாட்டு விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்தொழில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கலை மற்றும் பண்பாட்டுத் துறைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும், எமது கலை மரபுகள் இன்றும் உயிர்ப்புடன் நிலைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றன.
கலை என்பது வெறுமனே பொழுதுபோக்குக்கான ஒரு துறையல்ல என்பதுடன், சாதி, மதம், பிரதேசம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் வலிமையான ஊடகமாகவும் விளங்குகின்றன.
தேசிய ஒற்றுமையையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதில் கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளுக்கு முக்கியமான பங்கு இருப்பதுடன், இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் வரலாற்று ரீதியாக மாற்றுக்கருத்துக்களும் அறிவுசார் சிந்தனைகளும் உருவான மண்ணாக விளங்கியதுடன், அபாரமான புத்திஜீவிகளையும் அறிஞர்களையும் உருவாக்கிய பெருமையையும் கொண்டுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினரிடையே காணப்படும் கலை ஆற்றல்களையும், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பையும் பார்க்கும்போது, யாழ்ப்பாணம் மீண்டும் ‘மாற்றுக்கருத்துக்களின் ஊற்றாக’ துளிர்விடுவதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சியின் ஊடாக அறிவுசார் சமூகத்தை கட்டியெழுப்பி, அதன் மூலம் நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
ஒரு நாடு பொருளாதார ரீதியாக மட்டும் வளர்ச்சியடைவது போதுமானதல்ல என்பதுடன், கலை, இலக்கியம், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இத்தகைய முழுமையான வளர்ச்சிக்கு சரியான அரசியல் செயற்பாடுகளும் தொலைநோக்கான வழிகாட்டலும் அவசியமாகும்.
இலங்கையின் எதிர்கால வளர்ச்சி தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே தங்கியுள்ளது என்பதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் பரஸ்பர புரிந்துணர்வும் இல்லாமல் நாட்டின் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியாது.
இதனடிப்படையில், கலை மற்றும் பண்பாட்டை சமூகங்களை இணைக்கும் பாலமாகப் பயன்படுத்தி, அனைத்து மக்களையும் ஒரே தேசிய நோக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊