முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கருகில் துப்பாக்கி பிரயோகம்- மூவர் காயம்

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

விமான நிலையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய முனையத்திற்கு அருகில் கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிந்த பறவை கூட்டத்தை விரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எதிர்பாராத விதமாகக் குறித்த துப்பாக்கிச் சூடு விமான நிலைய விலங்குகள் மற்றும் பறவைகளின் ஆபத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பயணித்த கெப் வாகனத்தின் மீது விழுந்து வெடித்துள்ளது.

இதனால் கெப் வாகனத்திலிருந்த ஏனைய வெடிபொருட்களும் வெடித்துச் சிதறியுள்ளன.

இதன்போது கெப் வாகனத்திலிருந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்கை்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp