செய்திகள்

கடந்த அரசாங்கம் இந்தியன் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தியது என கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் நாங்கள் பயப்படப் போவதில்லையென யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.

எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் போராட உள்ளதாக தெரிவித்த அவர் எமது வளங்களை பாதுகாக்க எந்த விலையும் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.

;யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் இந்தியன் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தி நாங்கள் ஓரளவு தொழில் செய்துகொண்டு இருந்தோம்.
ஆனால் புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறைய இழுவைமடி படகுகள் எங்களது வளங்களை அழிக்கின்றது.

ஆகையால் எமது தொழிலாளிகளின் வலைகளும் இல்லாமல் போகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் புதிதாக பதவியேற்ற பின்னர் இந்த இழுவை படகுகளை நிறுத்துமாறு எமது சம்மேளனம் சார்பாக நாங்கள் பல கோரிக்கை கடிதங்களை கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளோம்.

இருப்பினும் நெடுந்தீவு தொடக்கம் சுண்டிகுளம் வரையிலான கடற் பகுதியில் இந்தியன் இழுவை படகுகள் எமது வளங்களை அழிக்கின்றன.

இவற்றினை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவினை எடுக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்தொழில் செய்யும் மக்களை இணத்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp