உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கச்சத்தீவுக்கு எதிர்பாராத பக்தர்களின் வருகை – அடுத்த வருட திருவிழா குறைகள் இன்றி சிறப்பாக நடாத்த ஏற்பாடு..!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே குரு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை இலங்கையில் இருந்து 4ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை இந்தியாவில் இருந்தும் 4ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் , இலங்கையில் இருந்தும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சென்றனர். அதனால் சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவில் கூடியமையால் பெரும் இன்னல்களை பக்தர்கள் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp