உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐஸ் போதை பொருளால் ஜேவிபியும் பொதுஜன பெரமுனவும் அரசியல் இலாபமீட்டுகின்றார்கள்- பிரதான எதிர்கட்சி

ஆபத்தான இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க அரசாங்கம் எத்தகைய திட்டங்களையும் திறனை கொண்டுள்ளது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது

இதுகுறித்து நடைபெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கா நேற்று (09-09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் குறிப்பிட்டதாவது, இலங்கைக்கு கடத்தப்பட்டதாகக் கருதப்படும், ‘ஐஸ்’ என அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை அரசியல் கருவியாக்குவது மக்களுக்கு தீங்கிழைக்கும் என்று அவர் எச்சரித்தார்.

‘கண்டெய்னர் தொடர்பான பிரச்சினையில் சரியான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் அரசியல் பலன் பெற முயற்சிக்கிறது.

அதேசமயம், அரசு பொதுஜன பெரமுனாவை குற்றம் சாட்டுகிறது; பொதுஜன பெரமுன அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறது.

இவ்விரு தரப்பும் இந்தச் சம்பவத்தை அரசியல் பலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றன’ என அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, ‘ஐஸ்’ தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் சுங்கத்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து நேற்று உடனடி பதிலை அளிக்க முடியவில்லை.

எனினும், ஊடகச் செய்திகள் தெரிவித்ததாவது, சுங்கத்துறை சம்பந்தப்பட்ட கண்டெய்னர்களை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அழைத்திருப்பதோடு, குற்றப்புலனாய்வு துறை தனித்த விசாரணையை முன்னெடுத்து வருவதாகும்.

மேலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் சரியான பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்ட 323 கண்டெய்னர்களுக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியதற்காக அரசாங்கத்தை ரத்நாயக்கா கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp