முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் பாஸ்கரன் மீதான தாக்குதல் சம்பவத்தில் கிளிக்கோடு விளையாடும் பொலிஸார்

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது வழக்கை பொலிஸார் திசை திருப்ப எடுத்த முயற்சியினை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாஸ்கரனை தலைக்கவசத்தால் தலையில் தாக்கப்பட்டது. தொடர்பாகவும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (15) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்தை பொலிசார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்பு பட்ட இரண்டு சந்தேக நபர்களை புதன்கிழமை (15) கைது செய்திருந்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை பொலிசார் திசை திருப்பும் நோக்கில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எதிராக புதன்கிழமை (15) மாலை போலியான முறைப்பட்டை பதிவு செய்துள்ளனர்
தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பேரில் ஒருவரை குறித்த சம்பவத்திலிருந்து விடுவித்து மற்றைய ஒருவரையே வியாழக்கிழமை (16) மாலை நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதனை அடுத்து வியாழக்கிழமை (16) மாலை இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கடமையிலுள்ள பதில் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக நடந்த விடயத்துக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரியதுடன் குறித்த விடயம் தொடர்பாக மீள முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிதையடுத்து் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp