உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளது.

(262 ஆம் பிரிவு) உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 66 (2) அத்தியாயத்தின் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு சனிக்கிழமை (31) பிரசுரித்துள்ளது.

பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் நிர்வாக மாவட்டத்தில் உள்ள,ஒவ்வொரு தொகுதிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பொலன்னறுவை, குருநாகல், திருகோணமலை,அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, நுவரெலியா, மாத்தளை, கண்டி, களுத்துறை,கம்பஹா ,கொழும்பு ஆகிய நிர்வாக மாவட்டங்களின் உள்ளுராட்சி அதிகாரசபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை அத்தாட்சிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்றது. பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு 2424ஃ 02 ஆம் இலக்கத்தின் கீழ் 2025.02.17 ஆம் திகதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மேலதிக உறுப்பினர் பட்டியல் மற்றும் பெண் பிரதிநிதித்துவ பட்டியல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இருப்பினும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த காலப்பகுதிக்குள் பெயர் பட்டியல் விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதை விரைவுப்படுத்துவதை கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 ஆம் அத்தியாயம்) 76 ஆம் பிரிவின் கீழான கட்டளையின் பிரகாரம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெயர் பட்டியல் விபரங்களை 2025.05.30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கடந்த மாதம் 27 ஆம் திகதி அறிவித்திருந்தது.

வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளூராட்சி மன்றங்களில் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும். வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள மாநகர சபை மற்றும் நகர சபைகளுக்கான மேயர் மற்றும் பிரதி மேயர்,தலைவர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் ஒருவாரத்துக்குள் பூரணப்படுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp