ஈழம்

உற்பத்தி பொருளாதாரமும் வேளாண்மையின் பங்களிப்பும்..!

e0ae89e0aeb1e0af8de0aeaae0aea4e0af8de0aea4e0aebf e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0aebee0aea4e0aebee0aeb0e0aeaee0af81e0aeaee0af8d e0aeb5 | Pathivu News
1992–1993 ஆம் ஆண்டுகளில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் முன்னெடுத்த வேளாண்மை போட்டி, அந்தக் காலகட்டத்தில் தமிழீழத்தில் நடைமுறையில் இருந்த பொருளாதார மற்றும் வேளாண்மை மேம்பாட்டு முயற்சிகளை பிரதிபலிக்கும் முக்கியமான வரலாற்றுச் சான்றாகும்.
உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், தன்னிறைவு அடிப்படையிலான விவசாய வளர்ச்சியை உருவாக்குவதிலும் வேளாண்மை முதன்மையான ஒரு துறையாகக் கருதப்பட்ட காலப் பகுதியை இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது.
விவசாய உற்பத்தி உயர்வு, அறிவியல் பயிர்செய்கை, மண் மற்றும் நீர்வள மேலாண்மை, விதைத் தேர்வு போன்ற அம்சங்களில் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த வேளாண்மை போட்டி நடத்தப்பட்டது. சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றிய உழவர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பாராட்டுவதன் மூலம் சமூக அளவில் விவசாய முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை இதன் மூலம் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
1990-களின் அரசினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார தடைகளினால் உருவாகிய கடினமான சூழ்நிலைகளிலும், உள்நாட்டு வளங்களை நம்பி நிலைத்த பொருளாதாரத்தை உருவாக்க முயன்ற தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத்தின் செயற்பாடுகளைப் பதிவு செய்யும் ஒரு ஆவணமாக இது விளங்குகிறது.
அந்தக் காலத்திய வேளாண்மை கொள்கைகள், வளர்ச்சி நோக்கங்கள் மற்றும் உழவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை புரிந்து கொள்ள உதவும் ஒரு முக்கியமான வரலாற்றுச் சான்று என்ற வகையில் இந்த அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.
பட்டினிச் சாவு, வேலை வாய்ப்பின்மை, அதன் மூலம் ஏற்படும் நெருக்குவாரங்கள், தற்கொலை முயற்சிகள், அத்தியாவசிய தேவைகளுக்கான பிரதியீடு, உற்பத்தி மறுசீரமைப்பு, போக்குவரத்து தடைகள் மற்றும் களஞ்சிய பற்றாக்குறைகள், மக்களின் தொடர்ச்சியான இடம் பெயர்வு, தமிழீழத்தை விட்டு மக்களை வெளியகற்றல், அறுவடை காலத்தில் அந்த பிரதேசங்கள் மீதான திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தப்படும் உற்பத்தி சேதாரங்கள் போன்ற எண்ணிலடங்காத கடும் சவால்களை அந்த போராட்ட காலத்தில் தமிழர் தேசம் எதிர்நோக்கியது.
அவை அனைத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சிறந்த திட்டமிடல் மற்றும் மக்கள் மயப்படுத்திய திட்ட அமுலாக்கல்கள் எம் மக்களை பட்டினிச் சாவிலிருந்தும் மேற்குறிப்பிட்ட அனர்த்தங்களிலிருந்தும் மீண்டெழ வைத்தது.
தத்துவங்களை மட்டும் கதைப்பதை விட நடைமுறையில் பலாபலன்களை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்கு இவ்வாறான செயல் திட்டங்கள் வரலாற்று சான்றாகும்.

You may also like

e0ae9ce0af86e0aea9e0af80e0aeb5e0aebe e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aebf e0ae88e0aeb0e0af81e0aeb0e0af81e0aeb3e0aebfe0aeaae0af8d | Pathivu News
உலகம் ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஜெனீவா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்..!

பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp