உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசாங்கம் அரசியல் இலாபமீட்டுவதற்காக பயன்படுத்துகின்றது – நாமல்

உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும்,பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச 25ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது நாடாளுமன்ற இணையத்தளத்தில் அதனை இப்போதும் பார்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்

இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் ஏற்கனவே சட்டமா அதிபரிடம் உள்ளன என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துரதிஸ்டவசமாக தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற தேசிய துயரத்தை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp