ஈரானில் வன்முறைக்குப் பின் மக்கள் போராட்டங்களைத் தடுக்க காவல்துறை எடுத்த நடவடிக்கையில் ஏற்பட்ட கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
ஆனால், ஈரானின் அரசுக்கு எதிராக அமெரிக்கா தேவையானால் நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையின்படி, நாட்டளாவிய போராட்டங்களை தடுக்க ஈரான் அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் ; 2,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
டிரம்ப் கருத்து தெரிவித்த நாளில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்களின் ராணுவ பணியாளர்களை கத்தார் நாட்டில் உள்ள ஆலு-உதேட் விமான தளத்திலிருந்து குறைத்தனர்.
அமெரிக்க அதிகாரிகள், இதனை ‘எச்சரிக்கை நடவடிக்கை’ என விளக்கினர்.

