செய்திகள்

ஈபிடிபி உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

கடந்த பொது தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அஹமட் லெப்பை அன்சார் என்பவரின் வீட்டின் மீது கடந்த 2024.11.30 இரவு கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த 2024.12.01 ஆந்திகதி அன்று பாதிக்கப்பட்டவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதன் போது தாக்குதல் இடம்பெற்ற அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார்விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

முகநூலில் சில தவறான விடயங்களை உட்செலுத்தி சில நபர்கள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும் இதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp