இலங்கை பல்கலைக்கழகங்களின் உலக தரவரிசையும் ஆய்வுத் திறனும் உயர்வடையச் செய்யும் நோக்கில், இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஐந்து வருட மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முன்மொழிவு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் உயர்கல்வித் துறையின் சர்வதேச மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
